
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று 2 ஆம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி பண்ருட்டி 157 மில்லிமீட்டர், வானமாதேவி 152 மில்லிமீட்டர், காட்டுமைலூர் 140 மில்லிமீட்டர், வேப்பூர் 117 மில்லிமீட்டர், மே.மாத்தூர் 116 மில்லிமீட்டர், எஸ்ஆர்சி குடிதாங்கி 110 மில்லிமீட்டர், சேத்தியாத்தோப்பு 102.6 மில்லிமீட்டர், பெலாந்துறை 87.1 மில்லிமீட்டர், புவனகிரி 83 மில்லிமீட்டர், குப்பநத்தம் 74.8 மில்லிமீட்டர், சிதம்பரம் 65.4 மில்லிமீட்டர், வடக்குத்துறை 60 மில்லிமீட்டர், விருத்தாசலம் 57.4 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.