தென்காசி மாவட்டம் கடையம் தாலூகா கீழகடையம் ஊராட்சிக்கு உட்பட்ட புலவனூரில் சொத்து தகராறில் தந்தையை வெட்டி கொன்ற மகன் வெறிச்செயல் இன்று மாலை 6.00 மணியளவில் புலவனூர் மேல் பஸ் ஸ்டாப் ரோட்டோரம் வசித்து வந்தவர் K.T.R. (எ) தங்கராசா இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் ஒரு பெண் பிள்ளைகள் உள்ளது இவருக்கும் இவரது முதல் மனைவிக்கு பிறந்த மகன் திருகுமரனுக்கும் நீண்ட நாட்களாக சொத்து பிரச்சினை இருந்து வந்தது இறந்த தங்கராசா இரண்டாவது திருமணம் முடித்து பல ஆண்டுகளாக கடையத்தில் வசித்து வருகிறார் சமீபத்தில் இவரது இன்னொரு மகன் இராணுவத்தில் பணிபுரிந்து வந்தவர் உடல்நல குறைவால் அவர் இறந்து விட்டார் அந்த துக்க நிகழ்வுக்கு கூட தங்கராசா கலந்து கொள்ள வரவில்லையாம் இதனால் தந்தைக்கும் மகனுக்கும் மனக்கசப்பு ஏற்ப்பட்டு கோபத்தின் உச்சத்திற்கு சென்ற மகன் திருக்குமரன் ஆத்திரத்தில் தந்தையை வெட்டி கொன்றார் கடையம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். விசில் செய்தியாளர் திருமுருகன்

