நெல்லை
மாவட்டம்நெல்லை
நெல்லை தொழிலதிபர் ஆர்எஸ் முருகன் அலுவலகத்தில் வருமான வரி சோதனை
நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்தை சேர்ந்தவர் ஆர் எஸ் முருகன். மாநிலத்தின் பிரதான சாலை ஒப்பந்தக்காரர் மற்றும் தொழிலதிபர். பாளையங்கோட்டை என் ஜி ஓ காலனியில் இவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளது.
இன்று காலை 10 மணிக்கு நெல்லை வருமானவரித்துறை அலுவலர் மகாராஜன் தலைமையில் வந்த அலுவலர்கள் தொழிலதிபர் ஆர் எஸ் முருகன் வணிக நிறுவனத்தில் மாலை 5 மணி வரை ஆய்வு செய்தனர்.

ஒப்பந்த பணிகளைச் செய்யும் போது அதற்கான தொகையில் ஒரு சதவீதம் அட்வான்ஸ் டாக்ஸ் ஆக கட்ட வேண்டும். அவ்வாறு கட்டப்பட்டு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து, முன்வரி செலுத்தாத தொகையை கணக்கிட்டு தொழிலதிபரிடம் அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் நெல்லை மாநகர் பகுதியில் அனைவரும் வியக்கும் வகையில் ஆர் எஸ் முருகன் மகனுக்கு பிரம்மாண்டமான திருமண விழா நடந்தது. அதற்காக இருவது கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் வருமானவரித்துறை ஆய்வு நடத்தியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
குற்றாலம் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்
தென்காசி மாவட்டம் குற்றாலம் இலஞ்சி வழி பாதையில் இருபுறமும் பழக்கடைகளை வைத்து கொண்டு சிலர் போக்குவரத்திற்கும் பொதுமக்களிக்கும் இடையூறாக இருந்து வந்தனர் இதன் தொடர்ச்சியாக எழுந்த புகாரின் அடிப்படையில் இன்று குற்றாலம் போலீசார் ஆக்கிரமிப்புகளைஅகற்றி வந்தனர்
-
கள்ள துப்பாக்கிகள் தாராளம் – ஒருவர் கொலை மறைப்பு என அடுக்கடுக்கான வனக் குழு தலைவரின் புகார் ஆடியோவால் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வன உயிரின சரணாலய எல்லைக்கு உட்பட்டது வெள்ளகவி மலைகிராமம் . இது ஆங்கிலேயர் கால (சுமார் 400 ஆண்டுகள் பழமையான மலை கிராமம் ) தொடர்புடைய மிகவும் அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ள இயற்கை எழில் நிறைந்த கிராமம் . இங்கு சுமார் 100 குடும்பங்கள் வரை வசித்து வருகின்றனர். இங்கு உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் உரிமைகளை பெற்ற தருவதற்காக வடுகபட்டியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரை தலைவராக கொண்ட வனக்குழு…
-
அம்பை அருகே ரெயிலில் ஏற முயற்சித்த போது பிளாட்பாரத்தில் தவறி விழுந்த பயணி – பையில் இருந்த செல்போன் வெடித்ததால் பரபரப்பு
நெல்லை மாவட்டம் அம்பை கல்லிடைக்குறிச்சி அக்கசாலை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (29),இவர் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிர்வாக பிரிவில் பணி செய்து வருகின்றார். இவர் தினமும் வேலைக்கு கல்லிடைக்குறிச்சியில் இருந்து நெல்லைக்கு ரெயிலில் சென்று வரும் நிலையில், இன்று வழக்கம் போல் செங்கோட்டையில் இருந்து நெல்லை செல்லும் பயணிகள் ரெயிலில், ஏறும்போது கால் தடுமாறி நடைமேடையில் விழுந்ததில் அவர் சட்டை பையில் இருந்த செல்போன் வெடித்து சிதறியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து…
-
*சாம்பவர்வடகரையில் கிணற்றில் சகோதரிகள் சடலமாக மீட்பு கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை!*
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை கீழுர் பொய்கை மெயின் ரோடு வைத்திலிங்கம் மனைவி சரோஜா(வயது-62), பரமசிவம் மனைவி இந்திரா(வயது-49) ஆகிய இருவரும் உடன் பிறந்த அக்கா தங்கை சொத்து பிரச்சனை காரணமாக இருவரும் இறந்ததாக கூறப்படுகிறது இருவரையும் காணவில்லை என்று காலை முதல் தேடி வந்ததாகவும்ஊருக்கு தெற்கே அவர்களுக்கு சொந்தமான கிணத்தில் இருவரும் காயங்களுடன் பிணமாக கிடந்தனர்அவர்களை தீயணைப்பு மீட்பு படையினர் உதவியுடன் சாம்பவர் வடகரை காவல்துறையினர் இருவர் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு தலைமை…