கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எரிந்த நிலையில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு.
கருகிய நிலையில் உடலை கைப்பற்றிய தான்தோன்றிமலை
இது கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் .
கரூர் பசுபதிபாளையம் அருணாசலம் நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (40) சுதா டிராவல்ஸ் என்ற பெயரில் டிராவல்ஸ் தொழில் செய்து வந்துள்ளார்.
தனியார் பஸ்பாடி நிறுவனத்தில் தனது வாகனத்தை நவீனபடுத்த ஏற்பட்ட செலவு தொகை சம்மந்தாக அதிக தொகை வசூலிக்கபட்டதால் மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் இதனால் ஏற்பட்ட இழப்பின் காரணமாக தனது இரண்டு மகள்களுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்ட சூழ்நிலையில் டிசம்பர்10ம் தேதி இரவு சுமார் 11.30 மணியளவில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது டிராவல்ஸ் வாகனத்தை நிறுத்திவிட்டு பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தனது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் வாட்ஸ்அப் மூலம் மரண வாக்குமூலம் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
அதில் தன் தற்கொலைக்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து குறிப்பிட்டுள்ளார்.
கடிதத்தையும் தற்கொலையின் போது பயன்படுத்திய அவரது டிராவல்ஸ் வாகனத்தையும் தாந்தோன்றிமலை போலீசார் கைப்பற்றி விசாரித்துவந்தனர். இந்நிலையில் நேற்று தற்கொலைக்கு காரணமான கரூர் அம்மன் பஸ் பாடி நிறுவன உரிமையாளர் கார்த்தி வயது 40 என்பவரை தாங்கிய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தற்பொழுது டிராவல்ஸ் உரிமையாளர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செய்தியாளர் கரூர் கண்ணன்