
தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழக அரசியல் பரபரப்பாக செயல்படுகிறது கட்சியும் வேண்டாம் கொடியும் வேண்டாம் என ஒதுங்கியிருந்த ரஜினி ஆன்மீக அரசியல் பயணம் துவங்கிவிட்டார் இந்நிலையில் மு.க.அழகிரி திமுகவில் இருந்து ஓரங்கட்டபட்ட நிலையில் தமது நிலைபாட்டை தெரிவிக்காமல் இருந்து வந்தார் இந்நிலையில் அழகிரியை பாஜக வளைத்துபோட எவ்வளவோ முயற்சி செய்தும் ஜம்பம் பலிக்கவில்லை இது இப்படி இருக்க தென்மாவட்டங்களில் பரவலாக தன் செல்வாக்கை உயர்த்திகொள்ள முடியும் என்ற நிலையில் இருந்த அழகிரி வன்னிய மக்களை தன்வசம் எடுத்துகொண்டு ஆளும் அரசுக்கும் எதிர கட்சிகளுக்கும் மிகவும் போட்டியாக இருக்கலாம் எனவும் திட்டமிட்டதாக தெரிகிறது இந்நிலயில் பாமக ராம்தாஸ்க்கு எதிரான குரு பேரவையை கையில் எடுக்க திட்டமிட்ட அழகிர. அதிகபடியான வன்னிய இன மக்களின் செல்வாக்கை பெற்று இருக்கும் விஜிகே மணிக்கு தூது விட்டுள்ளார் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தொலைபேசியில் அழைத்து புது களம் காண்போம் என்று கூரியுள்ளார் இதனால் தற்போது குரு பேரவையினரும் அழகிரி தரப்பினரும் மகிழ்ச்சியில் உள்ளனர் ரஜினி கட்சி பெயரை அறிவித்த பின் தானும் கட்சியின் பெயரை அறிவிப்போம் என காத்திருக்கிறார் அழகிரி