மதுரை ஆண்டிபட்டி தேனி கம்பம் போன்ற பகுதிகளில்  இரண்டு ஆட்டுக்குட்டிகளை வைத்து ஒன்றுக்கொன்று மோதவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவார்கள் இந்த சூதாட்டத்தில் காரணமாக ஏற்படும் மோதல் காரணமாக இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் உருவாகும் பின்னர் அது கொலையாக மாறிவரும் இந்த சூதாட்டம் தற்போது காவல் துறையினரால் தடை செய்யப்பட்டுள்ள இந்த விளையாட்டுக்களை தற்போது தென்காசி மாவட்டத்தில் புதியதாக அரங்கேற்றப்பட்டு வருகிறது இது இரு குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு குழுக்களும் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை மோதவிட்டு பணம் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது இந்த சூதாட்டம் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற இணையதளங்களில் புகைப்படங்களும் வீடியோக்களும் பகிரப்பட்டு பின்னர் அவர்கள் தொடர்பு எண்ணை கொடுத்து அதில் இருந்து இவர்கள் சந்தித்து இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இந்த சூதாட்டத்தின் காரணமாக பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு ஆபத்தில் முடியும் முன் காவல்துறையினர் அவர்களை கண்டறிந்து அவர்கள் வளர்க்கும் ஆடுகளை கைப்பற்றி அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களின் வேண்டுகோள் விடுத்துள்ளனர்விசில் செய்திகளுக்காக வீரமணி