
தென்காசி நகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாய நிலை ஏற்பட வாய்ப்புள்ளது இந்த நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன கடந்த 2011ஆம் ஆண்டு எடுத்த கணக்கின்படி 70 ஆயிரத்து 311 வீடுகள் உள்ளன இந்த வீட்டிற்கு தேவையான குடிதண்ணீர் நகராட்சி மூலம் வழங்கப்பட்டு வருகிறது குடிநீர் இணைப்பின் மூலமாக மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாக ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தவறான தகவலை அளித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் உண்மையாகவே வாரத்திற்கு ஏழு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது இதனால் வீட்டு குடியிருப்புவாசிகள் தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இருக்கும் மீதமுள்ள குடிநீர் களை சுத்தப்படுத்தி வருகின்றனர் சுத்தமான குடிநீர் மூலமாக டெங்கு பரவும் வாய்ப்பு அதிகமாகிறது ஆகவே உடனடியாக சம்பந்தப்பட்டஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்குவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்றும் தென்காசி நகராட்சி மக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்படுகிறது