
தென்காசி மாவட்ட காவல் துறை தூங்கிக் கொண்டு இருக்கிறதா தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் சுரண்டை காவல் சரகம் வீரகேரளம்புதூர் காவல் நிலையத்திற்குட்பட்ட கழுநீர்குளம் ஊரை சார்ந்த சில இளைஞர்கள் தஞ்சாவூர் கீழவாசல் ஆட்டுமந்தை தெருவில் மளிகை கடை நடத்தி வரும் மலையபெருமாள் என்பவர் வீட்டில் பட்டபகலில் துப்பாக்கி முனையில் வீட்டு உரிமையாளரை கட்டிப்போட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கழுநீர்குளம் கிராமத்தை சேர்ந்த மூன்று நபர்களை தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் வீரகேரளம்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கழுநீர்குளம் ஊரை சேர்ந்த நபர்கள் இதுபோன்ற குற்றசெயலில் ஈடுபடும் நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்க தவறியது எப்படி ? குற்றவாளிகள் சுரண்டை பகுதியில் தான் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை தங்க நகைகளை விற்று உள்ளனர் இதை தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரித்து கண்டறியும் வரை சுரண்டை காவல்துறையினரும் வீரகேரளம்புதூர் போலீசாரும் எப்படி கண்காணிக்காமல் விட்டனர் என்பது மிக விந்தையான செயல் இந்த நிகழ்வை சற்று ஆழமாக உற்று நோக்கினால் தென்காசி மாவட்ட காவல் துறை கோட்டம் சுரண்டை காவல் சரக வீ.கே.புதூர் போலீசார் சரிவர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வில்லை என்பது நிதர்சன உண்மை தங்கள் காவல் நிலைய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளை ஒழுங்காக செய்யவில்லை என்பதை காட்டுகிறது இது போன்ற கழுநீர்குளம் கிராம பகுதியில் பல குற்ற செயல்களில் சம்பவங்களில் ஈடுபட்டுவரும் பல குற்றவாளிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது இதை இப்பகுதியில் உள்ள காவல் நிலைய எஸ்பி சிஐடி போலீசார் தன் பணிகளை சரிவர மேற்க்கொள்ளாமல் புலனாய்வு விசாரணை சரிவர செய்யாமல் இருப்பது தான் முக்கிய காரணம் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசாரின் அலட்சிய மெத்தன போக்கே இதுபோன்ற கொள்ளை குற்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெற காரணங்கள் உடனடியாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இதற்கு துறைரீதியான நடவடிக்கை மேற்கொண்டு கழுநீர்குளம் கிராம பகுதியை தீவிர கண்காணிப்பு வலையத்திற்குள் கொண்டு வந்து மேலும் இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். விசில் செய்தியாளர் திருமுருகன்