கோக்கு மாக்கு

நாகையில் திமுக இம்முறை போட்டியிடுமா ? எம்எல்ஏ சீட்டுக்கு நிர்வாகிகள் போட்டா போட்டி

எம்எல்ஏ சீட்டுக்கு அடித்துக்கொள்ளும் நாகை மாவட்ட திமுக நிர்வாகிகள்.

நாகை மாவட்டம் 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி இருந்தது. இதில் மாயவரம் சீர்காழி பூம்புகார் ஆகிய மூன்று தொகுதிகளை தனியாக பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாகிவிட்டது.

இந்நிலையில் நாகப்பட்டினம் வேதாரணியம் கீழ்வேளூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது நாகை மாவட்டம்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வாய்ப்பு கேட்டு
திமுக மாவட்ட செயலாளராக இருக்கும் கௌதமன், மாவட்ட துணை செயலாளர் மனோகரன், கீழையூர் ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், முன்னாள் நாகை ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் மேகநாதன், நாகை மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முருகன் மற்றும் அதே கட்சியை சேர்ந்த சரவணன் ஆகியோர் எம்எல்ஏ சீட்டுக்கு போட்டோ போட்டி போடுகின்றனர்.

இந்த ஏழு பேரில் நால்வர் மட்டும் கட்சியின் விதிகளுக்கு தாக்குப் பிடிப்பார்கள் என்று கட்சி வட்டாரங்கள் வழியாக கூறப்படுகிறது…

நாகை தொகுதிக்கு இதுவரை 4 முறை கூட்டணி கட்சிக்கு மட்டுமே சீட்டு ஒதுக்கப்பட்டது. 20 ஆண்டுகளாக நேரடியாக திமுக களமிறங்கவில்லை இன்நிலையில் இந்த முறை திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர் நிறுத்தப்படுவதாக தெரிய வருகிறது.

ஏனென்றால் அதிமுக இரண்டு முறை வேறு கூட்டணி கட்சி யாருக்கும் சீட்டுக் கொடுக்காமல் நேரடியாக களம் இறங்கியது . இதில் இரண்டு முறையும் அதிமுகவே வெற்றியடைந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் எம்எல்ஏ சீட்டுக்கு முயற்சி செய்யும் திமுக நாகை மாவட்ட செயலாளர் கௌதமுக்கு , அவர் வசிக்கும் மீனவ கிராமத்திலேயே சில வார்டுகள் கீழ்வேளூர் தொகுதிக்கு பிரிக்கப் பட்டு விட்டதாகவும் அதனால் மீனவகிராமத்தில் வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இரண்டு மீனவ கிராமங்களுக்கு இடையில் ஏற்பட்ட கலவரத்துக்கு இவர்களும் சம்பந்தப்பட்டிருப்பதாக மீனவர்களிடையே பரவலாக பேசப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு வந்தவுடன் கௌதமன் கட்சிக்காரர்களை மதிப்பதில்லை என்றும் பல கட்டப் பஞ்சாயத்துகள் செய்வதாகவும் ஜாதி ரீதியான அரசியல் செய்வதாகவும் கட்சிக்குள்ளேயே கருத்து நிலவி வருகிறது.

இரண்டாவதாக வேளாங்கண்ணியில் வசிக்கும் கீழையூர் ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு கட்சிக்காரர்கள் இடையே நல்ல பெயர் இருக்கிறது, இருந்தாலும் நாகை தொகுதிக்கு புதிய அறிமுகமாக இருப்பதாலும், சில நாட்களுக்கு முன்பு நில சம்பந்தமான பிரச்சனை ஏற்பட்டதால் இவருக்கும் கொஞ்சம் வாய்ப்பு கம்மியாக இருப்பதாகவும். ஆனால் ஒரே ஜாதியை சேர்ந்த கௌதமன் ஐ விட எடிசனுக்கு நல்ல பெயர் இருப்பதாகவும் கட்சிக்காரர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் ஜாதி ஓட்டுகளை மட்டும் நம்பி களமிறங்குவது கஷ்டம்தான் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இப்படி இருக்கையில் தாமஸ் ஆல்வா எடிசன் ஒன்றிய செயலாளராக பதவி வகிக்கும் கீழையூர் பகுதியை , இரண்டாக பிரிக்கக் கோரி தனக்கும் ஒன்றிய செயலாளர் தரவேண்டும் என்று நாகை சட்டமன்ற தொகுதிக்கு இன்னொரு சீட்டுக்காக போட்டி போட்டுக்கொண்டிருக்கும் தலைமை செயற்குழு உறுப்பினர் மேகநாதன் செயல் கீலையூர் பகுதி திமுக வினரிடையே பிளவை ஏற்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அதிமுகவின் தமிழக கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஓ எஸ் மணியன் ஆதரவால் பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு டெண்டர் ஒன்றை எடுத்துள்ளதாகவும், திமுகவில் இருந்து கொண்டு அதிமுகவுக்கு பக்கபலமாக இருக்கிறார் என்றும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மேகநாதன் மீது திமுகவினர் இடையே பரபரப்பான குற்றச்சாட்டு பரவி வருகிறது இதனால் இவருக்கு நாகை தொகுதியில் சீட்டு கிடைப்பது அரிய விஷயம் என்றும் கட்சிப் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

மூன்றாவதாக தொழில் அதிபரும் வர்த்தகர் அணி துணை அமைப்பாளருமான முருகனும் வேட்பாளர் சீட்டு கேட்டு தலைமையை அணுகியதாகவும் கூறப்படுகிறது. கஜா புயலிலும், கொரோனா காலத்திலும், தற்போது நிவர் புயலின் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் நேரடியாக களம் இறங்கிய முருகன் தன்னுடைய சொந்த செலவில் அனேக நிவாரண உதவிகளையும் கட்சிக்குள் நல்ல பெயரையும் வாங்கியதாத தெரிய வருகிறது. திமுக கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் பேசும்போது நாகப்பட்டினம் தொகுதிக்கு ஜாதி மதம் அல்லாது பொதுவான நபரை நிறுத்தினால் திமுக ஜெயிப்பதற்கு அமோக வாய்ப்பு இருக்கிறது என்றும். அது தற்போது கட்சியிலும் சரி ஜனங்கள் இடத்திலும் சரி முருகனுக்கு மவுசு இருப்பதாக கூறினார்.

இப்படி ஒரு எம்எல்ஏ சீட்டுக்கு ஏழு பேருக்கு மேலாக அடித்துக்கொண்டு உருளுகிறார்கள்.

இதைவிடக் கொடுமை என்னவென்றால் அதிமுகவில் சீட்டுகேட்டு ஓபிஎஸ் இபிஎஸ் குரூப்புக்கு இடையே பனிப்போர் நடந்து வருகிறது. அதை அடுத்த இதழில் பார்க்கலாம்.

செய்திகளுக்காக திராவிடன்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button