
சிவகங்கை மாவட்டத்தில் அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‘‘அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி குறித்து தவறாக பேசினால், அண்ணாமலை செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுகவினர் கருப்புக்கொடி காட்டுவோம்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி சார்பில் மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது