சீர்காழியில் தங்கம் வெள்ளி மொத்த வியாபாரம் செய்பவர் வீட்டில் இரண்டு பேர் கழுத்து அறுத்து படுகொலை செய்த வழக்கில் 2 பேர் கைது, ஒருவர் போலீசாரால் சுட்டுக்கொலை
17 கிலோ தங்க நகைகள் மற்றும் 2 துப்பாக்கி பறிமுதல்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோட்டில் வசித்து வருபவர் தன்ராஜ் 50 இவர் தருமகுளத்தில் நகை,அடகு கடை மற்றும் தங்கம், வெள்ளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை 6 மணி அளவில் வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் வீட்டின் கதவை தட்டி ஹிந்தியில் பேசியுள்ளனர். தன்ராஜ் கதவை திறந்தவுடன் உள்ளே சென்றவர்கள் அவரை தள்ளிவிட்டு உள்ளே சென்றுள்ளனர். உள்ளே வருவதைப் பார்த்த தன்ராஜ் மனைவி ஆஷா 45 மகன் அகில் 24 ஆகிய இருவரும் சத்தம் போட்டுள்ளனர். சத்தம் போடுவது அறிந்த உள்ளே சென்ற மர்ம நபர்கள்
கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து படுக்கை அறையில் கட்டிலின் அடியில் இருந்த 17 கிலோ தங்க நகைகளை திருடிக் கொண்டு வெளியே நின்ற தன்ராஜ் மற்றும் மருமகள் நெக்கல் இருவரையும் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளனர் தொடர்ந்து வீட்டினுள்ளே இருந்த சிசிடிவியின் ஹார்ட்வேர் எடுத்துக்கொண்டு தன்ராஜ் காரை பயன்படுத்தி தப்பியோடியுள்ளனர்.இதில் படுகாயமடைந்த இருவரும் சீர்காழி அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து சம்பவ இடத்தில் மயிலாடுதுறை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா விசாரணை மேற்கொண்டு வந்தார் இந்நிலையில் தப்பிப்பதற்கு பயன்படுத்திய கார் ஒலையாம்புத்தூர் சாலையில் நின்று கொண்டிருப்பாதாக காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது.அதைத் தொடர்ந்து அங்கு சென்ற காவல் கண்காணிப்பாளர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏதாவது தடயம் கிடைக்கிறதா என விசாரணை மேற்கொண்டார்.அதனைத் தொடர்ந்து எருக்கூர் மேலத்தெரு என்ற இடத்தில் சந்தேகப்படும்படியான 3 நபர்கள் வயலில் அமர்ந்து உள்ளதாக அந்தப் பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.சந்தேகப்படும்படியான நபரை பிடிப்பதற்கு போலீசார் முயற்சி செய்தனர் அப்பொழுது கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை மிரட்டி உள்ளனர். அப்போது துணிச்சலாக காவல் கண்காணிப்பாளர் ஓட்டுனர் சுரேஷ் அவர்களை பிடித்தார்.
பின்னர் காவல்துறையினர் வயல்வெளிக்கு அழைத்துச் சென்று வயலில் கிடந்த நகை பையை பறிமுதல் செய்தனர் இந்நிலையில் வயலில் பதுக்கி வைத்திருக்கும் நகை பையை எடுக்க மணிபால்சிங் என்ற கொலையாளியை அழைத்துச் சென்ற போது போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடும் போது மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா தலைமையில் என்கவுண்டர் செய்யப்பட்ட உடல் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது நகைககள் 17 கிலோ பறிமுதல் செய்தனர் மேலும் சிசிடிவிடி ஹார்டு டிஷ்க் பறிமுதல் செய்தல் செய்தனர். இரு கொலையாளியான ரமேஷ்,மணிஸ் சீர்காழி காவல் நிலையத்தில் விசாரணை செய்து வருகின்றனர்
செய்தியாளர்: ச. ராஜேஷ்