மே 26, 2021
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள்.
தமிழக பத்திரிகையாளர் ( அரசின் அங்கீகாரம் மற்றும் அடையாள அட்டை உள்ள) அனைவருக்கும், கொரோனா நிவாரணத் தொகையாக தலா ரூபாய் 5 ஆயிரம் மற்றும் கொரோனா தொற்று மூலம் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் என்று அறிவித்துள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு நலச் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்
தமிழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து தாலுகா வாரியாக உள்ள அச்சு மற்றும் காட்சி பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் கொரோனா நிவாரண நிதி கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
பத்திரிகையாளர்கள் அனைவரையும் முன்கள பணியாளர்களாக அறிவித்து, அதன் தொடர்ச்சியாக கிங்ஸ் மருத்துவ மனையில் ஆக்சிசன் சிலிண்டர் வசதியுடன் 25 படுக்கைகளையும் ஒதுக்கி, பத்திரிகையாளர்கள் நலனில் தனி அக்கறை யோடு செயல்படும் தமிழக அரசுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ் நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச் சங்கம் சார்பில் மீண்டும் ஒரு முறை நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக அரசுக்கு தமிழ் நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச் சங்கம் எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
மிதார் மைதீன்
பொதுச் செயலாளர்
தமிழ் நாடு பத்திரிகையாளர்கள்
பாதுகாப்பு நலச் சங்கம்