திண்டுக்கல் நகரில் போலீசாருக்கு கபசுர குடிநீர் வழங்கி, ஆதரவற்றவர்களுக்கு டிஐஜி முத்துசாமி உணவு வழங்கினார். திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அனைத்து இடங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தி டிஐஜி முத்துசாமி போலீசாரை உற்சாகப்படுத்தி வருகிறார். மேலும் ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்யும் போலீசாரை மைக்கில் அழைத்து பாராட்டு தெரிவிக்கிறார். இந்நிலையில் கடந்த வாரம் பழனி பகுதியில் ஆய்வு நடத்திய டிஐஜி, அங்குள்ள நரிக்குறவர்களுக்கு உணவு வழங்கினார். இந்நிலையில் போலீசார் தொடர்ந்து உதவிகளை செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோயில் அருகே டிஐஜி.முத்துசாமி காவல்துறையினருக்கு இன்று கபசுர குடிநீர் பொடி,சத்து மாத்திரை, முக கவசம் ஆகியவற்றை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். அது போல நமது உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நன்றாக வேலை செய்ய முடியும் .மற்றவர்களுக்கு சேவை செய்ய முடியும். ஆகவே தினமும் நடைப்பயிற்சி, யோகா செய்ய வேண்டும் .மேலும் முட்டை உட்பட சத்தான உணவுகளை போலீசார் உண்ண வேண்டும். மற்றவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும், என்றார்.