தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி பகுதியில் மனநலம் பாதித்த நபர் சாலையில் சுற்றித்திரிந்து வருகிறார்.. திடீரென இருசக்கர வாகனத்தில் செல்வோர் மீது தாக்குதலும் நடத்துகிறார்… சாலையில் நடந்து செல்வோர் மீதும் பயமுறுத்தி கைகளை பிடித்து ரத்த காயங்கள் ஏற்படுத்தி விடுகிறார். உடனடியாக சொக்கம்பட்டி காவல் நிலைய பொறுப்பாளர்கள்அப்பகுதியை நடமாடிக் கொண்டிருக்கும் மனநல பாதிக்கப்பட்ட நபரை பிடித்து உரிய இடத்தில் ஒப்படைக்குமாறு அப்பகுதியில் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
செய்தியாளர்
குற்றாலம் வீரமணி