திரும்பும் இடமெல்லாம் ஆவின் பாலகம். பீடி, சிகரெட் கிடைக்கும். பால் மட்டும் விற்பதில்லை. தமிழ்நாடு அரசின் பொது துறை நிறுவனமான “ஆவின் ” பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பாலை கொள்முதல் செய்கிறது. பின்னர் பாக்கெட்டுகள் மூலமாக சமன்படுத்தப்பட்ட பால் கொழுப்பு நிறைந்த பால் என பல்வேறு வகைகளையில் முகவர்கள் மூலமாக சில்லறை விற்பனைனயும் செய்கிறது. பால் மட்டுமல்லாது நெய், பால்கோவா, மோர், குல்பி ஜஸ், சாக்லேட் உள்ளிட்ட பல்வேறு சுவையுடன் குளிர்பானங்கள் என பால் சார்ந்த பொருட்களை பெரிய அளவில் வணிகப்படுத்தி வருகிறது. ஆவின் நிறுவனம் .கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட சிவகாசியைச் சேர்ந்தவர் . எனவே இந்த பகுதியில் உள்ள அதிமுக பொறுப்பாளர்கள் விசுவாசிகள் என 18 புதிய ஆவின் மினி பார்லர் (விற்பனை நிலையம்) அமைக்க ஏற்பாடு செய்து கொடுத்தார். ஏற்கனவே சுமார் 25 ஆவின் முகவர் கடைகள் உள்ளன.விளம்பர பலகைகளில் மட்டும் ஆவின் பெயர் உள்ளதே தவிர அங்கு ஆவின் பொருட்கள் பெரிய விற்பனை செய்யப்படுவதில்லை. சில கடைகளிலும் பெயரளவிற்கே விற்பனை செய்யப் படுகிறது. இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் ஆவின் கடைகள் இருந்தும் வெறும் 1200 லிட்டர் (பால் + தயிர்) மட்டுமே விற்பனையாகிறது. மிகப் பெரிய தனியார் பால் மற்றும் ஜஸ்கிரீம் விற்கும் நிறுவனத்தின் உரிமையாளர் சிவகாசியைச் சேர்ந்தவரே. தனியார் நிறுவனம் பல்வேறு பெயர்களில் பால் ஜஸ்கிரீம் வகைகளை தன்னுடைய கிளைகள் மூலம் சிறப்பாக விற்பனை செய்கிறது. ஆவின் ஹைடெக் மினி பார்லர் கடைகள் என அமைத்தும் ஆவின் நிறுவனத்தின் பால் மற்றும் பால் பொருட்கள் குறைந்த அளவே விற்பனையாகிறது. சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தற்போதைய பால்வளத் துறை அமைச்சர் நாசர் அவர்கள் தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்து விற்பதாகவும் ஆவின் நிறுவனம் தரமான பாலை விற்பதாகவும் தெரிவித்தார். தனியார் பால் நிறுவனங்களின் விற்பனையுடன் ஒப்பிடுகையில் மிக குறைந்த அளவே ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையிலும் ஆவின் பொருட்களை விற்பனை செய்யாமலும் இருக்கும் ஆவின் பாலகம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? M.சிவா சிவகாசி