கொரோனா தொற்று காலத்தில் ஒவ்வொரு நொடியும் ஓடிக்கொண்டே இருக்கிறார் தமிழக முதல்வர் என அமைச்சர் கீதாஜீவன் பேட்டி
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் 1 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அமைச்சர் கீதா ஜீவனிடம் வழங்கினர். பின்னர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் பேசும்போது கொரோனா காலத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஒவ்வொரு நொடியும் ஓடிக்கொண்டே இருக்கிறார் தமிழகத்தில் ஆக்சிசன் தட்டுப்பாடு ஏற்பட்ட போது முழு முயற்சி எடுத்து ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் ஆக்சிசன் உற்பத்தி செய்யப்பட்டு தற்போது தமிழகம் தன்னிறைவு பெற்றுள்ளது என தெரிவித்தார் மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் தோற்று படிப்படியாக குறைந்து வருகிறது அரசு மருத்துவமனையில் 780 படுக்கைகள் நிரம்பியது. ஆனால் தற்போது 318 கொரோனா நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டால் கூட அதை எதிர்கொள்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
செய்தியாளர்
ஷேக் மதார்