நாகை மாவட்டம் திருக்குவளை வட்ட அலுவலகத்தில் , இந்தியன் ரெட் கிராஸ், வசந்தம் டிரஸ்ட், மற்றும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், வட்டாட்சியர் கார்த்திகேயன் தலைமையில், கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த சுமார் 20க்கும் மேற்பட்ட ஏழ்மையான மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, மளிகை சாமான், புடவை ,காய்கறிகள் உள்ளிட்ட தொகுப்புகளை கொடையாளர்கள் வழங்கினார்கள்.
சமூக இடைவெளியை கடைபிடித்து நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் தாசில்தார் கார்த்திகேயன், விவசாயிகள் சங்க தனபாலன், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாட்டை சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் செய்திருந்தார்.
நாகை செய்தியாளர்: ச.ராஜேஷ்