தூத்துக்குடியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்கோ சட்டத்தின் கீழ் கைது; போலீசார் நடவடிக்கை
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தாய் தந்தை வெளியே சென்றபோது வீட்டில் தனியாக இருந்த 9 வயது சிறுமிக்கு தூத்துக்குடி பெருமாள் புரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற வாலிபர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் இதுகுறித்து பாதிக்கப்பட்ட தாயார் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரை விசாரணை செய்ததில் சதீஷ்குமார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சதீஷ்குமாரை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே வைத்து மடக்கிப் பிடித்தனர். பின்னர் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது சதிஷ்குமார் மீது போக்கோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.