இலவச அரிசி வழங்கிய இந்திய தேசிய லீக் . சிவகாசி முஸ்லீம் ஓடைத் தெரு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏழை எளிய பொதுமக்களுக்கு இலவசமாக அரிசி பைகள் வழங்கப்பட்டன. சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு. AMSG அசோகன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள். சட்டமன்ற உறுப்பினர் பேசியதாவது: நான் வெற்றி பெற பெரும் காரணமான முஸ்லீம் சமுதாய மக்களுக்கு நன்றிகள். தங்கள் பகுதியில் உள்ள குறைகள் எதுவானாலும் தெரிவியுங்கள்.உடனே சரி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணியுங்கள். முக கவசம் அணியாதவர்கள் 15 அடி தூரத்தில் இருந்தாலும் அவர்கள் மூலம் தொற்றுப் பரவ வாய்ப்புள்ளது. அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. செய்யது ஜஹாங்கிர் அவர்கள் செய்திருந்தார். நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் சிவா