
கடலூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து, களத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். கடலூர் மாநகராட்சி பகுதியில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களை, சி. கந்தசாமி மகளிர் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்குத் தேவையான அரிசி – பிரட்- போர்வை மளிகைப் பொருட்கள் அடங்கிய நலத்திட்ட உதவிப் பொருட்களை நிவாரணமாக நேற்று (டிசம்பர் 1) வழங்கினார். உடன் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.