தூத்துக்குடியில் ஆயுதப்படை ஆண் பெண் காவலர்கள் 200 பேர் ரத்ததானம்:
மாவட்ட காவல்துறை சார்பில் வாட்ஸ்அப் எண் வழங்கப்பட்டு அவசரக் காலத்திற்கு காவலர்கள் இரத்ததானம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேட்டி
சாலை விபத்து, கர்ப்பிணி தாய்மார்கள், மற்றும் அவசர காலத்திற்கு ரத்ததானம் வழங்குவதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையுடன் இணைந்து மாவட்ட காவல்துறையினர் இன்று இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் துவங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து மருத்துவர் சாந்தி ரத்ததானம் வழங்குவது குறித்து தமக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதை தொடர்ந்து ஆயுதப் படையை சேர்ந்த ஆண் பெண் காவலர்கள் 200 பேர் ரத்த தானம் வழங்கினர் ரத்த தானம் வழங்கிய காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உடலுக்கு ஆரோக்கியமான சத்தான பொருட்களை வழங்கினார். காவலர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ரத்ததானம் வழங்கி வருகின்றனர் மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்து, கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் அவசர அறுவை சிகிச்சை உள்ளிட்ட அவசர காலத்திற்கு ரத்ததானம் வழங்குவதற்காக மாவட்ட காவல்துறை சார்பில் வாட்ஸ்அப் குரூப் உருவாக்கப்பட்டுள்ளது இதில் தனக்கு எந்த வகையான ரத்தம் தேவைப்படுகிறது என தகவல் தெரிவித்தால் உடனடியாக நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று காவலர்கள் ரத்ததானம் வழங்க ஆயுதப்படையில் காவலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்