
 சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது அவரது வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர் இதனால் வாகன ஓட்டிக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது வாக்குவாதம் முற்றிய நிலையில் போலீசார் வாகன ஓட்டியை நடுரோட்டில் வைத்து சரமாரியாக லத்தியால் தாக்கியுள்ளார் வாகன ஓட்டிகள் உடன் வந்திருந்த நபர் போலீஸாரிடம் விட்டுவிடுங்கள் என்று கெஞ்சி கொண்டிருந்தார் இருப்பினும் அவை எல்லாம் காதில் வாங்காதது போன்று போலீசார் அந்த நபரை தாக்குவதிலேயே குறியாக இருந்துள்ளார் இந்த சம்பவம் அனைத்தையும் சுற்றியிருந்த காவலர்கள் தமது செல்போனில் வீடியோவாக எடுத்து கொண்டிருந்தனர் தற்போது அவை வலைதளங்களில் வெளியாகி வருகிறது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்நிலையில் வாகன ஓட்டியை தாக்கிய உதவி ஆய்வாளரை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன