கோவை: கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் தடுப்பூசி செலுத்த அவசரப்படவேண்டாம் என்றும் 2 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக இருந்தது. இப்பொழுது கோவையில் அதிகமாக தாக்கம் இருந்தது. இதன் காரணமாக தொடர்ந்து அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக தொற்று படிப்படியாக குறைந்து 500க்கு கீழ் குறைந்துள்ளது.
இந்நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் குறைந்தபட்சம் ஆறு வாரங்கள் அல்லது இரண்டு மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி எடுத்துக்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் ஆறு வாரங்களுக்கு பின்னரே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
கொரோனா இரண்டாம் அலை, தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் கோவையில்தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த இரண்டு மே மாதத்தில், 5,000க்கும் மேல் இருந்த தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை, மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம், சுகாதார துறையினரின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக, தற்போது தினசரி பாதிப்பு 500க்கும் குறைவாக வந்துள்ளது. நோய் தாக்கம் குறைந்தாலும், உயிரை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசிதான் ஒரே தீர்வு என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். இதனால், தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதனிடையே, கொரோனா தொற்றுள்ளவர்கள், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி இருப்பவர்கள், முறையான பரிசோதனை மேற்கொள்ளாமலும், சிகிச்சைக்கு பயந்தும் தடுப்பூசி போட்டுக்கொள்ள நினைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பொதுமக்கள் அச்சப்பட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ள தேவையில்லை முறையாக குரல் பரிசோதனை செய்து பிறகே தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பாதிக்கப்பட்டு குணமானவர்கள் ஆண்டிபயாடிக் ஸ்டீராய்டு போன்ற மருந்துகள் எடுக்கப்பட்டு இருப்பார்கள். அதனால் இவைகள் அனைத்தும் படிப்படியாக குறைந்து உடல் சமநிலைக்கு வருவதற்கு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகும்.
ஆகவே, தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் அவசரப்பட தேவையில்லை காத்திருந்து முறையான பரிசோதனைக்குப் பிறகு தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
செய்தியாளர் கார்த்திக் பாலாஜி