
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதிகாலை முதலில் சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.