ஆழ்வார்குறிச்சி அருகே ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரால் தனித்தீவான கிராமம்சவப்பெட்டி கொண்டு செல்ல வழி இல்லாமல் ரயில்வே தண்டவாளத்தில் கொண்டு சென்ற மக்கள் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செங்கனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் நெல்லை – செங்கோட்டை ரயில்வே சுரங்க பாதை உள்ளது.இந்த பாதையில் சிறிதளவு மழை பெய்தாலே தண்ணீர் தேங்கும் அவல நிலை நீடிக்கிறது.இந்த கிராம மக்கள் அடிப்படை தேவைக்கு இந்த சுரங்க பாதையை கடந்து ஆழ்வார்குறிச்சிக்கு செல்லும் நிலை உள்ளது. தற்போது பெய்த மழையால் இரண்டு நாட்களாக சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது.பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றி வருகின்றனர்.தொடர்ந்து சுரங்க பாதையை சுற்றி ஊற்று இருப்பதனால் தண்ணீர் ஊறிக் கொண்டே உள்ளது.இதனால் தண்ணீரை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால் அந்த கிராம மக்கள் தொடர்ந்து வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அங்கு 105 வயதான கனியம்மாள் என்ற மூதாட்டி ஒருவர் தற்போது உடல்நல குறைவால் காலமாகியுள்ளார். சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் சவப்பெட்டியை அந்த வழியாக கொண்டு செல்ல முடியாமல் மிகவும் சிரமத்துடன் ரயில்வே தண்டவாளத்தை கடந்து கொண்டு சென்றனர்.இந்த கிராம மக்கள் மாற்று பாதை கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் ரேஷன் அட்டை ஆதார் அட்டை ஆகியவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தையும் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read Next
செய்திகள்
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
க்ரைம்
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
6 days ago
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
1 week ago
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
2 weeks ago
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
2 weeks ago
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
2 weeks ago
கொடி கட்டி பறக்கும் ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
2 weeks ago
வங்கி கடனை கட்டாததால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்ற குழுவினர் வந்தபோது மாணவர்கள் மாடியில் ஏறி நின்று குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்
2 weeks ago
ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்
2 weeks ago
மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்
Related Articles
பாஜக மாவட்ட தலைவர் – திண்டுக்கல் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜன் வாக்குவாதம்
April 19, 2024
பணிக்கு திரும்பிய ஆய்வாளர் சோமசுந்திரத்திற்கு கோபி டி.எஸ்.பி. தங்கவேல் பூங்கொத்து கொடுத்தும் ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்பளித்தனர்.
September 16, 2020
முதல்வரின் தாயாரை சந்இத்த ஆளுநர் !
August 19, 2022
போதைப்பொருள் விற்பனை குறித்து ஆய்வு
December 18, 2024