திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள குளத்துபட்டியைச் சேர்ந்த ராஜாமணி 53. இவர் தற்போது நிலக்கோட்டையில் காமராஜர் நகரில் குடியிருந்து வருகிறார். இவரது மனைவி பெயர் கோட்டை ராணி இவர்கள் இருவருக்கும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று ராஜேஸ்வரி, லோகேஸ்வரி என்ற பவித்ரா 2 மகள்களும், கோட்டைச்சாமி என்ற மகனும் உள்ளார்கள். இதில் ராஜேஸ்வரி திருமணம் செய்து தனது கணவரோடு தனியாக வசித்து வருகிறார். லோகேஸ்வரி என்ற பவித்ரா வயது 27. இவர் குளத்துபட்டியைச் சேர்ந்த அரிசி கருப்பன் வயது 30 என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு என்ன கருத்து வேறுபாடு காரணமாக நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருவருக்கும் சமாதானம் பேசியும் ஒத்து வராததால் இருவரும் பிரிந்து விட்டனர். அதனைத் தொடர்ந்து ராஜாமணி தனது மகள் லோகேஸ்வரி என்ற பவித்ரா, மனைவி கோட்டை ராணி, மகன் கோட்டை ராஜ் ஆகிய 4 பேர்களும் நிலக்கோட்டையில் குடியிருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கோட்டை ராணிக்கும் மகள் லோகேஸ்வரி என்ற பவித்ராக்கும் ஏற்கனவே திருமணம் செய்த அரசி கருப்பனோடு சேர்ந்து வாழ போவதாக பவித்ரா கூறியதைத் தொடர்ந்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறில் ஒருவருக்கொருவர் கையில் அடித்துக் கொள்ளும்போது மகள் லோகேஸ்வரி என்ற பவித்ரா கீழே விழுந்து தலையில் அடிபட்டு மயக்கம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து உடனடியாக தனது கணவர் ராஜாமணிக்கு கோட்டை ராணி போன் மூலம் லோகேஸ்வரி என்ற பவித்ரா கீழே விழுந்து மயங்கி கிடக்கிறார். ஆட்டோ பிடித்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் ஆட்டைப் பிடித்து வருமாறு கூறியதாக கூறப்படுகிறது. ராஜாமணி சம்பவ இடத்திற்கு வந்து தனது மகள் லோகேஸ்வரி என்ற பவித்ராவில் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் கொடுத்தனர். இது குறித்து ராஜாமணி கொடுத்த புகாரின் படி கோட்டை ராணியை நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் கைது செய்து நிலக்கோட்டை மேஜிஸ்டன் நல்ல கண்ணன் முன்னிலையில் ஆஜர் படுத்தி நிலக்கோட்டை சிறைச்சாலையில் அடைத்தனர். தாய் மகளுக்கு இடையே நடந்த சிறு தகராறு மகள் இறந்துவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
Read Next
3 days ago
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
3 days ago
கொடி கட்டி பறக்கும் ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு
4 days ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
4 days ago
வங்கி கடனை கட்டாததால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்ற குழுவினர் வந்தபோது மாணவர்கள் மாடியில் ஏறி நின்று குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்
5 days ago
ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்
5 days ago
மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்
5 days ago
மயங்கி விழுந்த தாய் யானையின் அருகே நின்று குட்டி யானை பாசப் போராட்டம் – சிகிச்சை பலன் இன்றி பலி
5 days ago
தனியார் பால் நிறுவனத்தில் நன்கொடை கேட்டு மிரட்டியதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு
5 days ago
மயங்கி விழுந்த தாய் யானை – பாசத்தை வெளிப்படுத்திய குட்டி யானை!
6 days ago
சொத்து பிரச்சனையால் உறவினரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம்
Related Articles
வடபழனி முருகன் கோயில் கொடிமரத்தில் வேல் மயில் முத்திரையில் தேனீக்கள் பக்தர்கள்பரவசம்
December 7, 2020
ஊராட்சி திட்ட இயக்குனர் ஆய்வு
December 5, 2024
கஞ்சா கடத்திய 4 பேர் கைது
June 30, 2024
Check Also
Close
-
விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம்September 10, 2024