
திருவண்ணாமலையில் தியாகி நா. அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயக்குமாரி தலைமை வகித்தார் உதவி தலைமை ஆசிரியர் சண்முகம் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் வெங்கடேசன், செயலாளர் ஜான் வெலிங்டன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ. ஏ. ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பிளஸ்-1 பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகளை வழங்கி பேசினார்.