மூன்றாவது கண்ணின் அவதாரம் ஏகே விஸ்வநாதன் ஐபிஎஸ.
விருது நகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புகழாரம்
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட மனோகர படு வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் பொது நலனில் அக்கறை கொண்டு களத்தில் இறங்கியுள்ளார்
அவர் பொறுப்பேற்ற உடன் நில அபகரிப்பு கட்டப்பஞ்சாயத்து போதை வஸ்துகள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்
என பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்
இந்நிலையில் மாவட்டம் முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் அதில் முக்கியமாக குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் பொது மக்கள் நிம்மதியாக தங்களது வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பெருக்கிக் கொள்ள வேண்டும் என அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்த காவல் கண்காணிப்பாளர் மனோகர் சென்னை மாநகர காவல்துறையை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு குற்ற நிகழ்வு இல்லா மாவட்டமாக மாற்ற வேண்டும் என்பதே தமது ஆர்வமாக இருப்பதாக தெரிவித்த அவர்
முன்னாள் சென்னை மாநகர காவல்துறை ஆணையாளராக இருந்த ஏ கே விஸ்வநாதன் தமக்கு மட்டுமல்லாமல் தமிழக காவல் துறையினருக்கும் முன்மாதிரியாக இருந்துள்ளார் என்று தமது நெகிழ்ச்சியை தெரிவித்தார்
விருதுநகர் மாவட்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு போதுமான ஒத்துழைப்பு தந்து வருவதால் குற்ற நிகழ்வுகள் பெருமளவு குறைக்கப்பட்டு இருப்பதாகவும் எந்நேரத்திலும் நம்மை தொடர்பு கொண்டு குற்ற நிகழ்வுகளை பற்றி கூறினால் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்ததோடு அவர்களது பெயர் மற்றும் விவரங்கள் வெளியிடப்படாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்
குற்ற நிகழ்வுகள் இல்லா சமூதாயமாக திகழ காவல்துறை மிக முக்கியம் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்
விசில். செய்திகளுக்காக
சிவகாசியில் இருந்து சாகுல் ஹமீது