
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதி மேக்களூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவரும், கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான கு.பிச்சாண்டி வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், கீழ்பெண்ணாத்தூர் ஒன்றிய செயலாளர் ஆரஞ்சு ஆறுமுகம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.