2020 – 21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகையை இதுவரை வழங்காத இக்கோடோக்கியோ நிறுவனத்தைக் கண்டித்து தமிழக காவிரி விவசாய சங்கத்தினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் தகுதி உள்ள விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டியும், சம்பா ரபி பருவத்திற்கு பயிர் காப்பீடு கட்டுவதற்கு கிராம நிர்வாக அலுவலருக்கு தமிழக அரசு உத்தரவு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர். ஒன்றிய அரசை கண்டித்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாகை கீழ்வேளூர் திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று அரசுக்கு எதிராக எதிர்ப்பு பதிவு செய்தனர்.
நாகை செய்தியாளர்: ச.ராஜேஷ்