பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்ததை கண்டித்து திண்டுக்கல் பேருந்து நிலையம் முன்பு பாஜகவினர் சாலை மறியல் போராட்டம் போக்குவரத்து பாதிப்பு
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக நிர்வாகி ஒருவரை திமுகவைச் சேர்ந்தவர்கள் தாக்கியதை கண்டித்து இன்று பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஒட்டன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அப்போது மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர் இதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் திண்டுக்கல் பேருந்து நிலையம் எதிரில் சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது அப்போது திமுக அரசை கண்டித்தும், காவல்துறையை கண்டித்தும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள் இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாஜக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அரை மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்பு சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது சாலை மறியல் காரணமாக பேருந்து நிலையம் பகுதிகளில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
செய்திகள் : ரியாஸ், திண்டுக்கல்
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #திண்டுக்கல் #Dindukal #பிஜேபி #BJP #பாஜக