செய்திகள்

“இல்லம் தேடி கல்வி திட்டம்” தொடங்கி வைத்தார் முதலமைச்சர்..

கொரோனா தொற்றின் காரணமாக சுமார் 2 ஆண்டுகள் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் நேரடியாக நடைபெறாமல் ஆன்லைன் மூலமே மாணவர்கள் கல்வி கற்று வந்தனர்.இதன்காரணமாக மாணவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.எனவே, மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்கவும், 1 முதல் 8-ம் வகுப்புகள் வரையான மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ‘இல்லம் தேடி கல்வி’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதலியார்குப்பத்தில் இந்த புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றுமுதல் தொடங்கி வைத்தார்.இந்த திட்டத்தின்படி மாணவர்களின் வீடுகளுக்கு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை கற்றல் செயல்பாடுகள் நடைபெறும். இத்திட்டம் காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி உள்பட 12 மாவட்டங்களில் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட இருக்கிறது.இந்த பணியில் ஈடுபடும் தன்னார்வலர்கள் 6 மாதங்கள் தினமும் 1 மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவை மூலம் குழந்தைகளுக்கு புதுமையான முறையில் பாடம் கற்று கொடுப்பார்கள். இதன்மூலம் மாணவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருக்காது என கருதப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இத்திட்டமானது ஒரு அரசு திட்டமாக மட்டுமில்லாமல் பெற்றோர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், ஆசிரியப் பெருமக்கள் பலதுறையைச் சார்ந்த பிரபலங்கள் என அனைவரும் இணைந்து முன்னெடுத்துச் செல்லும் ஒரு இயக்கமாக திட்டமிடப்பட்டுள்ளது என்றும்; இம்முயற்சிக்கு மக்கள் அனைவரின் தீவிர பங்கெடுப்பு தேவைப்படுகிறது என்றும்; நம் குழந்தைகளின் பாதுகாப்பான எதிர்காலத்திற்காக அரசுடன் இணைந்து செயலாற்றவும், தமிழ்நாட்டிலுள்ள படித்தவர்கள் இத்திட்டத்தில் தன்னார்வலர்களாகப் பங்கேற்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #இல்லம்தேடிகல்விதிட்டம் #முதலமைச்சர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button