“இதுக்குமா யூடியூப் யூஸ் பண்றாங்க!!” யூடியூப் பார்த்து குழந்தை பெற்றெடுத்த கேரள பெண்!!
அக்டோபர் 20ம் தேதி, யாருடைய உதவியும் இன்றி, குழந்தையை பெற்றெடுத்து, தொப்புள் கொடியையும் வெட்டியுள்ளார். குழந்தையின் அழுகை சத்தம் கேட்டபோதுதான், இந்த சம்பவம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தில், அண்டை வீட்டைச் சேர்ந்த 21 வயது இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இருவரும் நெருங்கிப் பழகி வந்தது இருவீட்டுக் குடும்பத்தாருக்கும் தெரிந்த நிலையில், சிறுமி கர்ப்பமடைந்த தகவலை குடும்பத்தாரிடம் இருவரும் மறைத்துள்ளனர்.
மாணவியின் தந்தை தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். தாய் படுக்கையில் இருக்கும் நோயாளி. சகோதரி திருமணமாகி சென்றுவிட, விடுதியில் தங்கி படித்து வரும் சகோதரன் எப்போதாவதுதான் வீட்டுக்கு வருவது வழக்கம். அந்த மாணவி கர்ப்பமடைந்த பிறகு, ஆன்லைன் வகுப்பு என்று கூறி அவரது அறையை விட்டு வெளியே வராமலேயே இருந்துள்ளார். இதனால், அவரைப் பற்றி குடும்பத்தாருக்கு எதுவும் தெரியாமல் போயுள்ளது.
இந்நிலையில், குழந்தை மற்றும் சிறுமியை குடும்பத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, தாயும், சேயும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #யூட்யூப் #கேரளா #குழந்தை #YouTube #BabyDelivery