திருப்பதி
ஆந்திர மாநிலம்
29.04.2022
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவதூறாக விமர்சித்த ஆந்திர அமைச்சர் ரோஜா
விஜயவாடாவில் என்டிஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ரஜினி என் டி ஆர் பற்றியும் சந்திரபாபு பற்றியும் பேசியதை ரோஜா கடுமையாக கண்டித்து பேசினார். விஜயவாடாவில் செய்தியாளர்களை சந்தித்த ரோஜா
ரஜினிகாந்தின் வார்த்தைகளைக் கேட்டு என்டிஆர் ஆன்மா வேதனை அடையும் என்று கூறினார்.
சந்திரபாபு ரஜினி மூலமாக பொய்களை மக்கள் மத்தியில் சொல்ல வைத்திருக்கிறார் என்றார்.தேவைப்பட்டால் என்டிஆர் யார் என்று தெரிந்துகொள்ள சில வீடியோக்களை ரஜினிகாந்திடம் தருகிறேன்.என்டிஆரை அவமானப்படுத்தியவர் சந்திரபாபு.இங்குள்ள அரசியல் பற்றி ரஜினிகாந்துக்கு என்ன தெரியும் . அதனால்தான் என்டிஆர் ரசிகர்களை மனம் நோகும் வகையில் பேசினார் ரஜினிகாந்த் என்றார் ரோஜா. சந்திரபாபு இல்லாத காலத்தில் ஹைதராபாத் வளர்ச்சி ஏற்பட்டது. என் டி ஆர் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் திருப்பி அளித்தவர். வெளிநாட்டில் தெலுங்கு மக்கள் வாழ காரணமானவர் என் டி ஆரே அன்றி சந்திரபாபு இல்லை சந்திரபாபுவுக்கு விஷன் 2020 இல்லாததாலே 2019 தேர்தலில் தோல்வி அடைந்தார். 2024ல் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என ரோஜா சாடினார்
இது எதுவும் தெரியாமல் ரஜினகாந்த் பேசியுள்ளார் என்று ரோஜா ரஜினிகாந்த் உரையை விமர்சித்து பேசியது ஆந்திராவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என்பது தமிழருக்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு அவர் சூப்பர் ஸ்டார்.ரஜினி காந்த் ஆந்திராவில் இந்த விழாவில் பங்கேற்க வரும்போதே அங்கிருந்த கூட்டம் தலைவா தலைவா என்று கூச்சலிட்டனர். ஆந்திர மக்கள் ரஜினி காந்த் அபிமானிகள் என்பதை மறந்து அவரை விமர்சிக்கும் அளவிற்கு ஒரு மாநிலத்தின் அமைச்சர் ரோஜா தனக்கு தோன்றியதை பேசியிருப்பது சரியா என்று ஆந்திர அரசியல் வட்டாரத்தினர் கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி சினிமா துறையில் இருக்கும் ரோஜா இவ்வாறு சூப்பர் ஸ்டார் குறித்து பேசியது கண்டித்து சோஷியல் மீடியாவில் விமர்சனங்கள் பெருகி வருகிறது