முன்னாள் மாணவர்களின் கூட்டுமுயற்சி கோவையில் பாரம்பரிய வனத்தொகுப்பு..!
தமிழகத்திலேயே முதல் முறையாக கோவையில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய மரக்கன்றுகளை மட்டும் உள்ளடக்கிய வனத்தொகுப்பு இன்று அமைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு நிகழ்ச்சிகள் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில் கடந்த 1975ஆம் ஆண்டு முதல் 1979 ஆம் ஆண்டு வரை இப் பல்கலைக்கழகத்தில் விவசாயம் மற்றும் தோட்டக்கலை துறையில் படித்த மாணவர்கள் ஒன்றாக இணைந்து பாரம்பரிய வனத்தொகுப்பை அமைத்துள்ளனர்.மியாவாக்கி என்று அழைக்கப்படும் இந்த அடர்த்தியான வனத்தொகுப்பில் நாடு முழுவதும் இருந்து கொண்டுவரப்பட்ட 132 பாரம்பரிய தாவர வகைகள் நடவு செய்யப்பட்டுள்ளன.தமிழகத்திலேயே முதல் முறையாக இத்தகைய பாரம்பரிய வனத்தொப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வனத்தொகுப்பை அமைக்க முன்னாள் மாணவர்கள் இணைந்து ரூ.6.5 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளனர்.இந்த வனத்தொகுப்பில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு விதமான மரக்கன்றுகள் வரவழைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டுள்ளன. காண்பதற்கு அரிய மரக்கன்றுகள் இங்கு நடவு செய்யப்பட்டுள்ளன. இதனால் இங்கு பயிலும் மாணவர்கள் பாரம்பரிய மரங்களை பற்றி தெரிந்து கொள்ள முடியும் அதோடு விவசாயிகளும் இந்த மரங்கள் குறித்து தெரிந்து கொள்ள முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்.குமார்,தோட்ட கலை கல்லூரி முதன்மையர்புகழேந்தி,மலரியல் துறை டாக்டர் ராஜாமணி, முன்னாள் மாணவர்கள் சேதுபதி, மோகன் குமார், வீரமணி, தேவசேனாபதி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.தமிழகத்திலேயே முதல் முறையாக இத்தகைய பாரம்பரிய வனத்தொப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வனத்தொகுப்பை அமைக்க முன்னாள் மாணவர்கள் இணைந்து ரூ.6.5 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளனர்.இந்த வனத்தொகுப்பில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு விதமான மரக்கன்றுகள் வரவழைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டுள்ளன. காண்பதற்கு அரிய மரக்கன்றுகள் இங்கு நடவு செய்யப்பட்டுள்ளன. இதனால் இங்கு பயிலும் மாணவர்கள் பாரம்பரிய மரங்களை பற்றி தெரிந்து கொள்ள முடியும் அதோடு விவசாயிகளும் இந்த மரங்கள் குறித்து தெரிந்து கொள்ள முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்.குமார்,தோட்ட கலை கல்லூரி முதன்மையர்புகழேந்தி,மலரியல் துறை டாக்டர் ராஜாமணி, முன்னாள் மாணவர்கள் சேதுபதி, மோகன் குமார், வீரமணி, தேவசேனாபதி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #கோவை #வேளாண்மை_பல்கலைகழகம் #முன்னாள்மாணவர்கள் #வனத்தொகுப்பு