போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்ட நடிகர் ஷாரூக்கானின் மூத்த மகன் ஆர்யன்கானிற்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.இந்தியாவின் உல்லாச கப்பல் என்று அழைக்கப்படும் ‘எம்பிரஸ்’ கப்பலில் டெல்லியை சேர்ந்த ‘ஃபேஷன் டிவி இந்தியா’ நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்ததது. இதில், சில சினிமா பிரபலங்கள் மற்றும் அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் சிலர் போதைபொருள் பயன்படுத்தியதாக போதை பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.மேலும், போதை பொருள் பயன்படுத்தியதை கண்ட கப்பல் அதிகாரிகள் போதை பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து, போதை தடுப்பு அதிகாரிகள் அந்த கப்பலில் சோதனை மேற்கொண்டனர்.கப்பலில் இருந்து போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், போதை பொருட்கள் பயன்படுத்திய வழக்கில் 13 பேரை போலீசார் கைது செய்தனர். இதில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆரியனும் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்து ஆர்யன் கானை ஜாமினில் வெளியே கொண்டு வர பல முயற்சிகள் தொடர்ந்து வந்தது.இந்நிலையில், சுமார் 21 நாட்களுக்கு பின்னர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான வாதத்தில், ஆர்யன் கானிடம் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்படவில்லை என்ற விஷயத்தை சுட்டிக்காட்டி வாதிடப்பட்டதாகவும் தெரியவருகிறது.வழக்கு விசாரணையில், ஆர்யன் கான் தரப்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முக்கால் ஆஜராகி வாதாடியதை தொடர்ந்து ஜாமின் கிடைத்துள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆர்யன் கான் தரப்பில் ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #ஆர்யன்கான் #போதைப்பொருள் #ஷாருக்கான் #Sharukhan #AaryanKhan #Drugs #ஜாமின் #மும்பைஉயர்நீதிமன்றம் #MumbaiHighCourt #