“யாரும் அதிகமாக சாப்பிடக்கூடாது!குறைவாக தான் சாப்பிடவேண்டும்!! ” வடகொரியா அதிபர் அறிவுறுத்தல்..
கடுமையான உணவு பஞ்சத்தினால் வருகின்ற 2025 ஆம் ஆண்டு வரை, நாட்டு மக்களை குறைவாக உணவு உண்ண வேண்டும் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவுறுத்தி உள்ளார்.உலக நாடுகளில் வடகொரியா நாடு தனித்துவமான ஒரு நாடாக விளங்கி வருகிறது. இந்த நாட்டில் சட்டதிட்டங்கள் மிக கடுமையாக இருக்கும் என்றும், அந்நாட்டின் காவல்துறை மற்றும் அந்நாட்டு அதிபர் கடுமையானவர் என்றும் மக்களால் அறியப்பட்ட வருகிறார்.மேலும் வல்லரசு நாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் வடகொரிய நாடு திகழ்ந்து வருவதாக அறியப்பட்டு வந்தது. இந்த நிலையில், வட கொரியா நாட்டில் தற்போது கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.இதற்கு முக்கிய காரணம், கடந்த ஆண்டு வந்த பெரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் தான். இந்த பெரு வெள்ளத்தினால் அந்நாட்டில் விளைவிக்கப்பட்ட பயிர்கள் முழுவதும் சேதம் அடைந்தது, தற்போது விவசாயத் துறையும் போதுமான உற்பத்தியை எட்டமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.மேலும் கொரோனா காரணமாக அந்த நாட்டின் அனைத்து எல்லைகளையும் வடகொரிய அரசு மூட உத்தரவிட்டது. இதனால் மக்கள் உணவு கிடைக்காமல் தற்போது தவித்து வருகின்றனர். மேலும், நாட்டில் உணவுப் பொருள்களுக்கு பெரும் தேவை ஏற்பட்டு உள்ள காரணத்தினால், அதன் விலைகள் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில், வட கொரியா நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு பஞ்சத்தால், மக்கள் குறைவான அளவில் சாப்பிட வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் அறிவுறுத்தியுள்ளார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு வரை உணவுப்பஞ்சம் இருக்கும் என்றும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அண்டை நாடுகளான சீனா உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தகமும் வருகின்ற 2025 ஆம் ஆண்டு வரை தொடங்க வாய்ப்பில்லை என்று அந்நாட்டு அரசு தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. இருந்தபோதிலும், இந்த உணவு பஞ்சத்தை சமாளித்து, நாடு மீண்டு எழும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வடகொரிய அதிபரின் இந்த அறிவிப்புக்கு உலக நாடுகள் பலவும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #வடகொரியா #NorthKorea #உணவுபஞ்சம் #FoodFamine