சசிகலா குறித்த ஓபிஎஸ் கருத்தில் தவறில்லை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சசிகலா குறித்து கூறிய கருத்தில் தவறு ஏதும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டி.மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த சனிக்கிழமை முன்னாள் முதலவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் வருகை தர உள்ள நிலையில் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டி ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மனு அளித்தார்.பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், சசிகலா விவகாரத்தில் அதிமுகவுக்கு சர்ச்சை எதுவும் கிடையாது. பழுத்த மரத்தின் மீதுதான் கல்லடிபடும். சசிகலா குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூறியதற்கு பிறகு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இதுவரை கருத்து ஏதும் சொல்லவில்லை.சசிகலாவை இணைப்பது குறித்து அதிமுகவின் உயர்மட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூறினார். இதில் எந்த தவறும் இல்லை. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் அவர் சொன்ன கருத்து சரிதான்.மேலும் அந்த பேட்டியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை செய்வோம் என்று தான் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அது தவறாக புரிந்து கொள்ளப்பட்ட காரணத்தால் பிற நிர்வாகிகள் அதற்கு எதிர் கருத்து தெரிவித்துள்ளனர். அதுகுறித்து திரும்ப விவாதித்து சர்ச்சையாக மாற்ற நான் விரும்பவில்லை என்றார்.
செய்திகள் : நீதிராஜ், மதுரை
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #அதிமுக #செல்லூர்ராஜு #சசிகலா #ஓபிஎஸ் #ADMK #SellurRaju #Sasikala #OPS