செய்திகள்

அக்.30, 31 கனமழை!! பள்ளிக்கு விடுமுறை!!

அக்.30, 31 கனமழை!! பள்ளிக்கு விடுமுறை!!

திருவாரூர் மாவட்டத்தில் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை. திருவாரூரில் அதிகபட்சமாக 80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பொழியும் எனவும் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும், கடலோர மாவட்டங்களான புதுச்சேரி காரைக்கால் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. நவம்பர் 1ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 30ஆம் தேதி வரை தென் மேற்கு வங்க கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.இந் நிலையில் டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து கடந்த 2 தினங்களாக விட்டு விட்டு பெய்து வந்த மழை திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இடி மற்றும் மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் பொது மக்கள் வெளியில் செல்ல முடியாமல் இருந்து வருகின்றனர். மேலும் தரைக்கடை வர்த்தகர்கள் மற்றும் வணிகர்கள் மழையின் காரணமாக மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவாரூரில் 80.6 மில்லி மீட்டரும், நன்னிலத்தில் 52.8 மில்லி மீட்டரும், திருத்துறைப்பூண்டியில் 14.0 மில்லி மீட்டரும், குடவாசலில் 15.4 மில்லி மீட்டரும், நீடாமங்கலத்தில் 15.8 மில்லி மீட்டரும், மன்னார்குடியில் 16.0 மில்லி மீட்டரும், முத்துப்பேட்டையில் 20 மில்லி மீட்டரும் மழையளவு பதிவாகியுள்ளது.தொடர் கனமழையின் காரணமாக தற்போது சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். 30 முதல் 40 நாட்கள் ஆன சம்பா பயிர்களுக்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கக் கூடிய நிலை உருவாக வாய்ப்புள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடிகால் வாய்க்கால்களை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தூர் வாரவேண்டும், தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள்விடுத்துள்ளது.பள்ளிகளுக்கு விடுமுறை:கனமழை காரணமாக திருவாரூர், தூத்துக்குடி, தஞ்சை, திருச்சி, நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #கனமழை #பள்ளிவிடுமுறை #SchoolLeave #HeavyRain #Tamilnadu #தமிழ்நாடு

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button