வெற்றிமாறனின் அடுத்த படைப்பு : பேரறிவாளன் தாயாரின் வாழ்க்கை வரலாறு !!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், அவரை வெளியே கொண்டு வர போராடி வரும் அவரது தாயார் அற்புதம்மாளின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க உள்ளதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார் .அசுரன் , ஆடுகளம் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய வெற்றிமாறன் , சூரி நாயகனாக நடிக்கும் ‘ விடுதலை ‘, சூர்யாவின் ‘ வாடிவாசல் ‘ உள்ளிட்ட திரைப்படங்களை அடுத்தடுத்து இயக்கி வருகிறார் .இந்நிலையில் தாம் இயக்க இருக்கும் பிற படங்கள் மற்றும் இணையத்தொடர் குறித்து நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார் . அதில் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் வெற்றிமாறன் குறிப்பிட்டார் .ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை விடுவிக்கும் முயற்சியில் 32 ஆண்டுகளாக தனியாளாக ஒரு தாய் போராடும் வலியை திரையில் காட்டியாக வேண்டும் என்கிற முனைப்புடன் வெற்றிமாறன் உள்ளார் .விரைவில் அற்புதம்மாள் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த அறிவிப்பையும் அந்த படத்தில் பேரறிவாளனாகவும் , அற்புதம்மாளாகவும் யார் நடிக்கப் போகிறார்கள் என்கிற அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரில் பேரறிவாளன் ஒருவர் என்பதும் அவரை விடுவிக்க அவரது தாயார் அற்புதம்மாள் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது .
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #சினிமாசெய்திகள் #வெற்றிமாறன் #பேரறிவாளன் #அற்பதம்மாள் #தமிழ்சினிமா #TamilFilms #CinemaNews #Vetrimaaran #Perarivalan #Arputhammal #Film #FilmUpdate