தமிழக அரசு பாடம் கற்றுக்கொண்டது!! ஆசிரியர்கள் விவரம் சுற்றறிக்கை!! அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
புதிய கல்விக் கொள்கையை, எதிர்க்கட்சியாக இருந்த போதிலிருந்தே திமுக எதிர்த்து வருகிறது. இக்கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில், புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் ஆசிரியர்களுக்கு கலை மற்றும் கலாச்சார பயிற்சி வழங்க விவரங்களை அனுப்பிடுமாறு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மேலும் அரசின் கொள்கைக்கும், சுற்றறிக்கைக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளதாகவும் பலரும் விமர்சித்தனர்.
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழியிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, மத்திய கலை மற்றும் கலாச்சார அமைச்சகத்தில் இருந்து வந்த மின்னஞ்சலுக்கு அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் இணை இயக்குனர் பதில் அளித்ததால் இந்த சர்ச்சை ஏற்பட்டது.
கலை மற்றும் கலாச்சார பயிற்சிக்கு ஆசிரியர்களின் விவரங்களை கேட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்படுவதாக கூறிய அமைச்சர், அஜாக்ரதையாக செயல்பட்ட இணை இயக்குநர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த விவகாரம் தங்களுக்கு ஒருபாடம் எனக்கூறிய அமைச்சர், இனி எந்த சுற்றறிக்கையாக இருந்தாலும் ஒப்புதல் பெற்ற பின்னரே அனுப்பப்படும் என்றார். இல்லம் தேடி கல்வி திட்டம் பற்றி, திமுக கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அவர்களின் கருத்துகளை கவனத்தில் கொள்வதாக கூறிய அமைச்சர், 4 அடுக்குகள் கொண்டு ஆராய்ந்த பின்னரே தன்னார்வலர்களை தேர்ந்தெடுப்போம் என்று பதிலளித்தார்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தமிழ்நாடு #தமிழ்நாடுகல்வித்துறை #அன்பில்_மகேஷ்_பொய்யாமொழி #புதியகல்விக்கொள்கை #Tamilnadu #NewEducationSystem