தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கன மழை பெய்து வருகிறது. இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழை காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தற்போது விருதுநகர் மாவட்டத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் நேற்று இரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதையடுத்து, இன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழையின் காரணமாக கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.தற்போது கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிவிப்புதமிழகத்தைப் போலவே புதுச்சேரியில் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தமிழ்நாடு #கனமழை #தொடர்மழை #பள்ளிவிடுமுறை #TamilNadu #திருநெல்வேலி #விருதுநகர் #புதுக்கோட்டை #கடலூர் #Thirunelveli #Virudhunagar #Kadaloor #HeavyRain #SchoolLeave