தூத்துக்குடியில் கனமழை: அரசு மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் – மக்கள் அவதி.தூத்துக்குடியில் கடந்த சில தினங்களக பெய்து வரும் கனமழையால் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று பகல் நேரத்தில் லேசான தூறலுடன் தொடர்ந்த பெய்தது. இரவு நேரங்களில் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் மிக பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தூத்துக்குடி மாநகரப் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறி உள்ளது. சாலைகள், தெருக்கள், குடியிருப்புகளை சூழ்ந்து மழைநீர் தேங்கியது. மேலும் சில பகுதிகளில் வீடுகளுக்குள்ளேயும் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி நிற்பதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள், மருத்துவர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர்.
செய்திகள் : மாரிராஜ் , தூத்துக்குடி