“கடா! கடா! கறி அடுப்புல இருக்கு” – 2 கோடிக்கு மேல் விற்பனை ஆகும் ஆட்டுக்கறி….
ஆத்தூர் செய்திதீபாவளியை பண்டிகையை முன்னிட்டு செம்பட்டி ஆட்டுச் சந்தையில் ரூபாய் 2 கோடிச மேல் வர்த்தகம் நடைபெற்றது., ஆடுகள் அதிக விலைக்கு விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி.திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ஆத்தூர், அய்யம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து செம்மறியாடு, குரும்பாடு, வெள்ளாடு, உள்ளிட்ட ஆடு வகைகள் வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வருவர். ஆட்டின் எடைக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படும். இந்நிலையில் வருகிற நவம்பர் 4 தேதி தீபாவளி பண்ஞடிகையை முன்னிட்டு இந்த வாரம் நடைபெற்ற ஆடு சந்தையில் 8 கிலோ எடை கொண்ட ஒரு ஆட்டின் விலை 10,000 முதல் 15,000 ரூபாய் வரை விற்பனையானது. ஆட்டுச் சந்தையில் ரூபாய் 2 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
செய்திகள் : ரியாஸ், திண்டுக்கல்
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #Diwali #தீபாவளி #ஆட்டுக்கறி