தீபாவளியன்று இறைச்சி கடைகளை திறக்கலாம்!!
தீபாவளியன்று இறைச்சி கடைகள் மூட வேண்டும் என்ற உத்தரவை கண்டித்து திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட இறைச்சி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் மண்டல அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து இறைச்சிக் கூடங்கள் அனைத்தும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி வியாழக்கிழமை அன்று மகாவீர் நிர்வான் நாளை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்பட வேண்டும்.இதேபோல், ஆடு, மாடு, இதர இறைச்சிக் கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடிகள், வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.சென்னையில் உள்ள அனைத்து மண்டல அலுவலர்களும் இறைச்சி கடைகள், கூடங்கள் அடைக்கப்பட்டுள்ளதா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில் தீபாவளியன்று இறைச்சி கடைகள் மூட வேண்டும் என்ற உத்தரவை கண்டித்து திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட இறைச்சி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அனைத்து மதத்தினரும் தீபாவளி அன்று அதிகளவில் இறைச்சி எடுப்பார்கள் என்பதால் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என இறைச்சிக்கடை உரிமையாளர்கள் சங்கம் தலைமைச் செயலர் இறையன்புவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில் தற்போது தமிழகத்தில் தீபாவளியன்று அனைத்து இறைச்சிக் கடைகளையும் திறக்க தமிழக அரசு அனுமதிமக்களின் உணர்வுகளை கருதியும், பல்வேறு அமைப்பினர் வைத்த கோரிக்கைகளை பரிசீலித்தும் அனுமதி வழங்கப்பட்டது.ஜெயின் மத வழிபாட்டு தலங்கள் அருகிலுள்ள இறைச்சி கடைகள் மட்டும் மூடியிருக்கும்..