கோக்கு மாக்கு
Trending

நாளை முதல் ஆட்டம் பாட்டம் தான்!

நவம்பர் ஒன்றாம் தேதி 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது .தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன . இந்நிலையில் , பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டுதலை பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது .அதன்படி , மாணவர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு முதல் முறையாக பள்ளிக்கு வருவதால் , கதை , பாடல் , விளையாட்டு , வரைதல் , வண்ணம் தீட்டுதல் மற்றும் கலந்துரையாடல் உள்ளிட்ட மன மகிழ்ச்சி செயல்பாடுகளை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது .1 முதல் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 15 நாட்கள் வரை மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வகுப்புகளை நடத்த வேண்டும் . புத்தாக்க பயிற்சி , முதன்மை பாடத்திட்டம் ஆகியவற்றை சிறுது கால அவகாசத்திற்கு பிறகு பின்பற்றவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.2 முதல் 5ம் வகுப்பு வரை 50 நாட்களுக்கு புத்தாக்க பாடத்திட்டத்தை நடத்த வேண்டும். பள்ளிகளை திறந்தவுடன் 1 முதல் 8ம் வகுப்பு வரை முதல் நாளே பாடத்திட்டங்களை தொடங்க வேண்டாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தமிழகஅரசு #பள்ளிமாணவர்கள்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button