தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கத்தினர் நாளை கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில், தனித்திட்டங்களுக்கான ஒப்பளிக்கப்பட்ட 1002 சுகாதார ஆய்வாளர்கள் , நிலை I பணியிடங்களை மீளப்பெற்று தொடர்ந்து நிலைநிறுத்தி மக்கள் நலன் காத்திட வேண்டும். ஓய்வில்லாது கொள்ளைநோய்த் தடுப்பு பணியாற்றி வரும் 900 சுகாதார ஆய்வாளர்கள் , நிலை II பிரிவினருக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கிடவேண்டும் சுகாதார ஆய்வாளர்கள் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிடவேண்டும் என்று தனது கோரிக்கைகளை நிலைநிறுத்தி நாளை (01.11.2021) விருதுநகரில் உள்ள துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலக வளாகம் முன்பு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தமிழ்நாடுசுகாதாரஆய்வாளர்சங்கம் #விருதுநகர்