திரைத்துறையில் சாதனை படைத்ததற்காக வாழ்நாள் சாதனைக்கான “தாதா சாகேப் பால்கே” விருது அண்மையில் பெற்றார் நடிகர் ரஜினிகாந்த்.
மத்திய அரசு இந்த விருதை அவருக்கு அளித்து கௌரவப்படுத்தியது. இதனிடையே, ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ தீபாவளி விருந்தாக திரைக்கு வர உள்ளது. இதனால் ரஜினியின் ரசிகர்கள் இரட்டை கொண்டாட்டத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு கடந்த 28ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தலைவலி மற்றும் லேசான மயக்கம் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் உடல் முழு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
எனவே, அவர் எப்போது வீடு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.இந்த நிலையில், சென்னை காவேரி மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் இரவு பத்து மணியளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்துக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #ரஜினி #சூப்பர்ஸ்டார் #இல்லம்_திரும்பிய_ரஜினி #Rajini #SuperStar