வைரஸ் காய்ச்சல் : 8 வயது சிறுமி உயிரிழப்பு!! மக்களே கவனம்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே வைரஸ் காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .பொன்னேரி அடுத்த ரெட்டிப்பாளையம் சோமஞ்சேரி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி வினோத் என்பவரின் 8 வயது மகள் வினோதினி அங்குள்ள அரசுப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தார் .சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றார்.ஆனாலும் காய்ச்சல் குணமாகாததால் பின்னர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்த சிறுமியின் தந்தை, தாய் உள்ளிட்ட உறவினர்களும் காய்ச்சலால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.அதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் கிராமத்தில் முகாமிட்டு காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் நீர் தேங்காமல் இருக்க குப்பைகளை அப்புறப்படுத்தி,கொசு மருந்தும் தெளிக்கப்பட்டது.மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பலருக்கும் காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் ஆரம்ப நிலையிலேயே அரசு மருத்துவமனையை அணுக மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #வைரஸ்காய்ச்சல் #திருவள்ளூர்