தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை!!!
நவம்பர் 4ம் தேதி தீபாவளி கொண்டாட இருக்கும் நிலையில் தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 5ம் தேதி வெள்ளிக் கிழமையும் அரசு விடுமுறை என தமிழ்நாடு அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது என்பதும், இதனை அடுத்து தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளித்தால் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்பதால் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என ஏற்கனவே அரசு ஊழியர்கள் மத்தியில் இருந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன.
இதனை அடுத்து, தீபாவளி கொண்டாட வெளியூர் செல்பவர்களின் வசதியை கணக்கில் கொண்டு, தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை விடுமுறை என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.
இதனை அடுத்து நவம்பர் 4, 5, 6, 7 என 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பது உறுதியாகி உள்ளது. இதனால் வெளியூர் செல்லும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தீபாவளி #அரசுவிடுமுறை #Diwali #GovernmentHoliday #Tamilnadu #தமிழகஅரசு